தேர்தலுக்கு 1 வருடம் உள்ளதால் இந்த முறை நன்கு யோசித்தே கூட்டணி குறித்த முடிவு எடுப்போம். கூட்டணி தொடர்பாக பாஜக-அதிமுக எங்களிடம் பேசவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டி.வி.யில் நானும் பார்த்தேன். தெரிந்துகொண்டேன். அது அந்த இரண்டு கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு. அதைப்பற்றி நாங்க எந்த கருத்தும் சொல்ல முடியாது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டி.வி.யில் நானும் பார்த்தேன். தெரிந்துகொண்டேன். அது அந்த இரண்டு கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு. அதைப்பற்றி நாங்க எந்த கருத்தும் சொல்ல முடியாது. தேமுதிக பொதுக்குழுவில் முக்கிய பதவிகள் குறித்து அறிவிக்கப்படும். பொதுக்குழுவுக்கு பிறகு அனைவரும் எதிர்ப்பார்க்கும் பரபரப்பான அறிவிப்பு இருக்கும்.
பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருந்தோம். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.. தேர்தலுக்கு 1 வருடம் உள்ளதால் இந்த முறை நன்கு யோசித்தே கூட்டணி குறித்த முடிவு எடுப்போம். தற்போது கூட்டணி தொடர்பாக நாங்கள் யோசிக்கவில்லை.. கூட்டணி தொடர்பாக பாஜக-அதிமுக எங்களிடம் பேசவில்லை. அடுத்த 6 மாதங்கள் கட்சி வளர்ச்சி பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தும்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு கேவலமானது. அசிங்கமாக பார்க்கிறேன். அமைசர் பதவியில் இருக்க தகுதியே இல்லாதவர் என்றார். தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றம் குறித்த கேள்வி, அது அக்கட்சியின் முடிவு. அதில் எங்களின் கருத்து எதுவும் இல்லை. புதிய தலைவருக்கு தே.மு.திக. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Read more: திமுக மறைமுக கூட்டாளி.. அதிமுக பழைய பங்காளி.. ஆச்சரியம் இல்லை..!! – தவெக தலைவர் விஜய்