fbpx

தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல ஆயிரம் லாரிகள்…! அண்ணாமலை பகீர் தகவல்

திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் நூர்ஜகான் அவர்களது மகன் ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டிடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு.? என கேள்வி எழுப்பி உள்ளார்.

English Summary

DMK is exploiting the state to make money.

Vignesh

Next Post

திருமணம் ஆன பெண்கள் தாய் வீட்டில் இருந்து இந்த பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது..!!

Mon Mar 17 , 2025
திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் தனது பிறந்த வீட்டை விட்டு வெளியேறி, மாமியார் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இருப்பினும், தங்கள் மகள் வீட்டில் கடினமாக உழைக்க வேண்டியதில்லை என்பதற்காக, அவர்கள் பிறந்த வீட்டிலிருந்து பொருட்கள், சுடப்பட்ட பொருட்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அனுப்புகிறார்கள். இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில பொருட்களை பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வரக்கூடாது. இப்போது, ​​எதை எடுத்துச் செல்லக்கூடாது என்று பார்ப்போம். வீட்டிலிருந்து வீட்டிற்கு […]

You May Like