fbpx

இன்று அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி…! அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் தெரியுமா…?

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம் பெறுவார் என அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பொழுது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை.

தலைமைச் செயலகத்தில் இரண்டாவது தளத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு சக அமைச்சர்களின் வரிசையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணி அளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்‌.

உதயநிதிக்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள மெய்யநாதனிடம் இருந்து, இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை எடுக்கப்பட்டு அது உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Vignesh

Next Post

அதிரடி...! வரியை இனி ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்...! 15-ம் தேதி முதல் அமல்...! தமிழக அரசு அறிவிப்பு...!

Wed Dec 14 , 2022
2022-2023ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத்‌ தொடரின்போது ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்களால்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள்‌ செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில்‌ வரி, குடிநீர்க்‌ கட்டணம்‌, விளம்பர வரி, உரிமக்கட்டணம்‌ போன்றவற்றை இணைய வழியின்‌ மூலம்‌ செலுத்தும்‌ வசதி உருவாக்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்‌ அனைத்து வரிகள்‌ மற்றும்‌ கட்டணங்களை இணையதளத்தின்‌ மூலமாக வீட்டு வரி […]

You May Like