உத்தரபிரதேசத மாநில பகுதியில் உள்ள பன்ஸ் கேரி கிராமத்தில் சம்சர் அலி, தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு வயிற்றுவலி என்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மனைவியை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த போது, பெண்ணின் வயிற்று பகுதியில் பேண்டேஜ் வைத்து தைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அப்பெண்ணின் வயிற்றில் இருந்த பேண்டேஜை வெளியே எடுத்தனர். இருப்பினும் அந்த பெண் உயிரிழந்து விட்டார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.