fbpx

சமையலில் புளியை சேர்ப்பதால் வயிற்று உபாதைகள் நீங்குமா….?

பொதுவாக சமையல் அதிகமாக புளியை சேர்த்துக் கொள்வது நம்முடைய உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம். ஆனால், சமையலில் புளியை சேர்த்துக் கொள்வது என்னென்ன விதமான நன்மையை உடலுக்கு வழங்குகிறது என்பது பற்றி தான் தற்போது நாம் தெரிந்து கொள்ள உள்ளோம்.

இந்த புளியை உணவில் சேர்த்துக் கொள்வதால், நமக்கு ஜீரண சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புளி உடல் எடையை குறைத்து, சீராக பராமரிக்க உதவி புரிகிறது. இந்த புளியில் நார்சத்து அதிகமாக இருக்கிறது. அதேபோல கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது.

நாள்தோறும் இந்த புளியை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக வயிறு குறித்த பிரச்சனைகள் சீராகி, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது. அதேபோல, இந்த புளி, தேவையில்லாத கழிவுகள், உடலில் இருந்தால், அதனை உடனடியாக உடலில் இருந்து நீக்கி, ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது.

இந்தப் புளி உடலில் இருக்கக்கூடிய இன்சுலின் அளவை குறைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. நச்சுக்களை நீக்குவதற்கும், எலும்புகளை உறுதிப்படுத்துவதற்கும், தூக்கத்தை அதிகரிப்பதற்கும் உதவியாக உள்ளது.

இந்த புளியில் இருக்கின்ற விட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

Next Post

நீங்க 'கரண்ட் பில்' கட்டலையா?… சில மணி நேரங்களில் ஃப்யூஸ் பிடுங்கப்படும்!… அலர்ட் செய்யும் புதிய விதிமுறை!

Tue Sep 19 , 2023
கரண்ட் பில் செலுத்த காலக்கெடு முடிந்ததும், அடுத்த சில மணி நேரங்களில் உங்கள் வீட்டு ஃப்யூஸ் பிடுங்கப்படும் என்று கடைசி நேர அலர்ட் கொடுக்கும் வகையில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் புதிய ஏற்பாட்டை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்துவருகிறது. தமிழ்நாட்டிற்கு மின்சேவை வழங்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் நுகர்வோரிடம் மின் கட்டணத்தை வசூல் செய்துவருகிறது.இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு உரிய காலக்கெடு விதிக்கப்படும். இதற்காக எஸ்.எம்.எஸ் மற்றும் […]

You May Like