fbpx

தினமும் ஆயில் புல்லிங் செய்வதால், பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் குறையுமா….?

பொதுவாக குழந்தைகள் இனிப்பு வகையான பொருட்கள் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவதால், அடிக்கடி அவர்களுக்கு சொத்தை பல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே குழந்தைகளுக்கு ஏற்படும் சொத்தை பல் பிரச்சனையிலிருந்து, அவர்களை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது குழந்தைகள் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு நிறைந்த பொருட்களை சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிப்பது மிகவும் அவசியமாகும். அதேபோல குழந்தைகளின் வாயை எப்போதும் தூய்மையாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

அதேபோன்று தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற இரண்டு எண்ணெய்களில் ஏதாவது ஒரு எண்ணெயைக் கொண்டு, நாள்தோறும் ஆயில் புல்லிங் செய்வது, வாய் மற்றும் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்கும் என்று சொல்லப்படுகிறது. நாள்தோறும் இப்படி செய்வதால், பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

கால்சியம் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக வழங்கி வருவதால், பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, கால்சியம் குறைவாக இருப்பதாலும், இந்த சொத்தைப்பல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. அதேபோல, கிராம்பு பல்லில் ஏற்படும் வலியை குறைப்பதற்கான ஒரு மருந்தாக பயன்படுகிறது. ஆகவே இதனை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது.

Next Post

கொத்தவரங்காய் சாப்பிடுவது, கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை தருமா.....?

Wed Oct 11 , 2023
பெரும்பாலும் கிராமப்புறங்களில், சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் கொத்தவரங்காய் சிறிது சிறிதான தோற்றத்தோடு, மெலிசாக காணப்படும். இந்த கொத்தவரங்காய் விட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, போலேட், புரதம்உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை தன்னுள் வைத்துள்ளது. இந்த கொத்தவரங்காயில் கிளைசிமிக்ஸ், இன்டெக்ஸ் போன்றவை மிக குறைவாக காணப்படுவதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. இந்த கொத்தவரங்காயின் விதைகளில், இருக்கின்ற நார்சத்தானது, குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் […]

You May Like