fbpx

செப்பல்தான போடல.. ஜெயிலுக்கு போகவில்லையே..? செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை பதிலடி..!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுக்கும் போது கொஞ்சம் யோசித்து எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். இனி அண்ணாமலையால் வாழ்நாள் முழுக்க செருப்பு அணிய முடியாது என்று கூறிய அவர், உள்ளூரில் விலை போகாத ஆடு, நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோல்வியடைந்ததாகவும் விமர்சித்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- செப்பல்தான் போடாமல் இருக்கிறேன், வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிவிட்டு மோசடி செய்து ஜெயிலுக்கு செல்லவில்லையே.. ஜெயிலுக்கு செல்வதும், மீண்டும் அமைச்சர் பதவியில் அருவதும் தான் தவறு. இதுகுறித்து உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. என்றார்.

தொடர்ந்து, மேடை போட்டு பாஜகவை திட்டுவது தான் திமுகவின் முழு நேர வேலையாக இருக்கிறது.. அனைத்து கட்சி கூட்டம் எதற்கு..? ஏன் என்றே தெரியாமலே எப்படி அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும். தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது. இதில் கூட திமுக அரசியல் செய்கிறது. தி.மு.க.வினருக்கு மக்கள் பிரச்சனை குறித்து எந்த கவலையும் இல்லை என்றார்.

மீனவர் பிரச்சனையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் புதிய அதிபர் வந்த பிறகு தான் கைது நடவடிக்கை அதிகமாகியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார். விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும்” என பேசினார்.

Read more:‘இசைஞானியுடன் இன்றைய காலைப் பொழுது..’ இளையராஜாவை நேரில் சந்தித்த முதல்வர்..! என்ன காரணம்..?

English Summary

Don’t wear sepals.. You’re not going to jail..? Annamalai responds to Senthil Balaji..!!

Next Post

'வீட்டை என் பெயருக்கு மாற்று..' சொத்து தகறாரில் தாயை கொடூரமாக தாக்கிய மகள்.! கதறிய மூதாட்டி..!! அதிர்ச்சி வீடியோ

Sun Mar 2 , 2025
Will Die By My Hand: Daughter Physically Abuses; Bites Mother Over Property Dispute

You May Like