போதை பொருள் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்ட நடிகை ஹேமா, நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ஹேமா பெங்களூருவில் உள்ள பிரபல ஹோட்டலில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், ஹேமா உள்ளிட்ட 86 பேர் போதை பொருள் எடுத்துக் கொண்டு கொண்டது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால், நடிகை ஹேமா கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஹேமா, “நான் எதுவும் செய்யவில்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்கள் என்னை என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். நான் போதை சாப்பிடவில்லை. நான் ஹைதராபாத்தில் தான் இருந்தேன். அங்கு பிரியாணி சமைக்கும் வீடியோவையும் பகிர்ந்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான், போதை விவகாரத்தில் சிக்கியதால் நடிகை ஹேமா நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்க தலைவர் மனோஜ் பேசுகையில், ”ஹேமா கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருவேளை அவர் நிரபராதி என்று வெளியே வந்தால் மீண்டும் அவரை சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார். தெரிவித்தார்.
தற்போது 57 வயதாகும் ஹேமா தெலுங்கு சினிமாவில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ்மகன், சத்யம், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.