fbpx

JOB: அரசு சார்பில் இன்று காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம்‌… இந்த அருமையான வாய்ப்பை யாரும் மிஸ் பண்ணாதீங்க…!

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு வாரமும்‌ வெள்ளிக்கிழமையன்று தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறுகிறது. எனவே, தனியார்‌ துறை நிறுவனங்கள்‌ தங்களுக்குத்‌ தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவசப்பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார்‌ துறைகளில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

அரசுத்‌ துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்‌ தேர்வு அனுப்பப்படும்‌. எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்துள்ள நபர்கள்‌ தனியார்‌ துறையில்‌ வேலைக்கு சென்றால்‌ அவர்களது பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில்‌ பல்வேறு தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு விற்பனையாளர்‌, மார்க்கெட்டிங்‌ எக்ஸிக்யூட்டிவ்‌, சூப்பர்வைசர்‌, மேலாளர்‌, கம்ப்யூட்டர்‌ ஆப்பரேட்டர்‌, தட்டச்சர்‌, அக்கவுண்டன்ட்‌, கேசியர்‌, மெக்கானிக்‌, போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர்‌. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும்‌ பள்ளிப்படிப்பு முடித்த ஆண்‌, பெண்‌, மூன்றாம்‌ பாலினத்தவர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ உட்பட அனைத்துவித கல்வித்தகுதிக்கும்‌ ஆட்கள்‌ தேவை என தனியார்த்‌ துறை நிறுவனங்கள்‌ தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும்‌, விருப்பம்‌ உள்ள நபர்கள்‌ அனைவரும்‌ இன்று காலை 10 மணி அளவில் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ள தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. இது தவிர இதர கல்வித்தகுதிகள்‌ உடையோரும்‌ தகுந்த பணியிடங்களுக்கு பரிசிலீக்கப்படுவார்கள்‌ என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌.

Also Read: அதிகரிக்கும் கொரோனா… இந்த 9 மாநில அரசு மட்டும் Influenza போன்ற நோய் குறித்து உடனே அறிக்கை அனுப்ப உத்தரவு…!

Vignesh

Next Post

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும்...! மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...!

Fri Jul 22 , 2022
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 23-ம் தேதி முதல் […]

You May Like