fbpx

ரூ.2,666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலை வாய்ப்பு…! அமெரிக்க நிறுவனத்துடன் CM ஸ்டாலின் ஒப்பந்தம்…!

ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 9.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஜாபில் நிறுவனத்துடன் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் 666 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கும் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

English Summary

Employment opportunity for 5365 people with an investment of Rs.2,666 crore…! CM Stalin’s deal with US firm

Vignesh

Next Post

புகழ்வதற்கு ஒன்றும் இல்லை.. வாழை ஒரு ஆபாச திரைப்படம்..!! சர்ச்சையை கிளப்பிய எழுத்தாளர் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Tue Sep 10 , 2024
Writer Saru Nivedita has criticized the relationship between teacher and student in the film Vaazhai as improper.

You May Like