fbpx

செல்போனிலேயே மூழ்கி இருந்த மகள் திடீரென்று காணாமல்போன நகை, பணம்….! இறுதியில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

செங்கல்பட்டு அருகே, இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி, இளம் பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பச் சொல்லி, அதை வைத்து மிரட்டி, பணம் நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் வசித்து வரும் 16 வயதான பள்ளி மாணவி ஒருவர், தன்னுடைய பெற்றோரின் செல்போன் மூலமாக நெல்லை மாவட்டத்தில் இருக்கின்ற திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பொறியாளர் வேல்முருகன் (22) என்பவரோடு, இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்து, அவருடன் கேம் விளையாடி இருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விளையாட்டிற்கு பணம் தேவைப்படுகிறது என்று தெரிவித்து, அந்த மாணவியிடம் வேல்முருகன் அவ்வப்போது பணம் பெற்று வந்ததாக தெரிகிறது. ஆனால், பணம் இல்லாத சூழ்நிலையில், வீட்டிலிருந்த நகைகளை எடுத்து, கொரியர் மூலமாக வேல்முருகனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான், திடீரென்று வீட்டில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர், சந்தேகப்பட்டு, மகளிடம் விசாரித்த போது, அவர் தன்னுடைய காதலன் வேல்முருகனுக்கு பணம் தேவைப்பட்டதால், நகையை கொரியர் மூலமாக அனுப்பி வைத்ததாக கூறியிருக்கிறார். இதனால், அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் மகளின் செல்போனை வாங்கி பார்த்தபோது, அதில் மகளின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வேல்முருகனுக்கு அனுப்பி இருந்தார் என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதோடு, இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் உடனடியாக கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கின்ற வண்டலூர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு சென்று, மாணவியை ஏமாற்றி நகை பணம் போன்றவற்றை பறித்த வேல்முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Next Post

திமுகவில் இவர்களுக்கு ஏன் முதல்வர் பதவி தர மறுக்கிறீர்கள்..? உங்களால் தலைவராக முடியுமா..? ஆ.ராசாவுக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி..!!

Wed Sep 6 , 2023
புதுச்சேரியில் மறைந்த முன்னாள் முதலஅமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ”திராவிட இயக்கங்களால் தான் கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகிக்கிறார்” என்று பேசினார். ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆளுநர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாங்கள் கடுமையாக படித்ததால் தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என […]

You May Like