தொடர்ந்து பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்க்கு சட்டம் சரியில்லை என்று நாம் ஒரு பக்கம் வாக்குவாதம் சரியில்லை என்றாலும், மற்றொரு பக்கம் மக்களின் மனநிலை சரியில்லை என்று தான் கூற வேண்டும். ஆபாச வீடியோவை பார்த்து அநேகரின் மனநிலை சீரழிந்து விட்டது என்று சொல்லலாம். ஆண்கள் மட்டும் தான் தவறு செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில். தவறு என்று தெரிந்தும் துனிகரமான தவறுகளை செய்யும் பெண்களும் உள்ளனர். அதே சமயம் என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் பிரச்சனையில் சிக்கும் அப்பாவி பெண்களும் உள்ளனர். அந்த வகையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த சமபவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாஸ்தி மாவட்டத்தில் மின்வாரிய பொறியாளராக வேலை பார்த்து வருபவர் ரவீந்திர குமார். இந்நிலையில், பூரணி என்ற பெண் ஒருவரின் வீட்டில் மின்சார கட்டணம் வழக்கத்தை விட அதிகம் வந்துள்ளது. இதனால் அந்த பெண், இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளார். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகம் ஆக்கிக்கொண்ட ரவீந்திர குமார், மின் கட்டணத்தை தான் குறைப்பதாக கூறி, அந்த பெண்ணை தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த அறையில் வைத்து, அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இக்கொடுமை அரங்கேற்றப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஜெஇ தனிமையில் இருந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பூரணி பாஸ்தி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய பொறியாளராக வேலை பார்த்து வரும் ரவீந்திர குமாரை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: கடற்கரையில் கேட்ட முனங்கள் சத்தம்; ஒருத்தர் பின் ஒருத்தராக சிறுமிக்கு செய்த காரியம்..