fbpx

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கும் கிடைக்கும்…..! தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி….!

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற குடும்பத் தலைவிகளுக்கு, தமிழக அரசு சார்பாக வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

அந்த வகையில், முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் நபர்கள் இருக்கும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில், திமுக தேர்தல் அறிக்கை வழங்கிய வாக்குறுதியின்படி, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ஆரம்பமாகும் என்றும், ஏற்கனவே அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த திட்டத்தில் இரண்டாவது கட்ட விண்ணப்ப முகாம்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதன் மூலமாக, சுமார் ஒரு கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், நேற்றைய தினம் ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. அந்த ஆய்வு கூட்டத்தில், வருவாய் துறையின் கீழ் சமூக பாதுகாப்பு திட்டத்தின் ஓய்வூதியம் பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் குடும்ப நபர்கள் பயன்பெறும் விதத்தில், இந்த திட்டத்தின் நிபந்தனையில் இருந்து, அவர்களுக்கு விலக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியபோது, முதியோர் கண்ணியமான வாழ்வை வாழ வேண்டும் என்பதற்காகவே அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் இருக்கின்ற தகுதியான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுவது எந்த விதத்திலும், தடை செய்யப்படாது. மற்ற திட்டங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் இருக்கின்ற அனைத்து, தகுதியுள்ள பெண்களும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம். அவர்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

Next Post

டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…..!

Sun Aug 13 , 2023
பெங்களூரு மருத்துவமனையில் இருந்து, அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து, கிருஷ்ணகிரி போய்க்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று, உடல்நல குறைவு உண்டானது. ஆகவே தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் பெங்களூருவில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் […]

You May Like