சேலம் அருகே உடன் பணியாற்றிய 17 வயது சிறுவனை மயக்கி கணவனை விட்டு சிறுவனோடு வீட்டை விட்டு ஓடிய 21 வயது இளம் பெண்ணால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சேர்ந்த 17 வயது சிறுவன் அந்த பகுதியில் இருக்கின்ற வெள்ளிப் பட்டறையில் பணியாற்றி வருகிறார். இவர், வழக்கம் போல கடந்த 14ஆம் தேதி வேலைக்கு சென்ற போது மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தோம். அவர் கிடைக்காததால், சிறுவனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பார்த்தபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பிறகு இது குறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் வழங்கினார். அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சிறுவன் வேலை பார்த்து வந்த அதே வெள்ளி பட்டறையில் வேலை பார்த்து வந்த 21 வயதான இளம் பெண்ணும், அதே நாளில் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
அதோடு அந்தப் பெண்ணின் கணவரும் தன்னுடைய மனைவியை காணவில்லை என்று தேடி வந்துள்ளார். மேலும், அவரும் காலநிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் சேர்ந்து காணாமல் போயிருக்கிறார்கள். அதோடு, இருவரும் சேர்ந்து ஊரைவிட்டு சென்றுவிட்டனர் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.