fbpx

முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாவிட்டாலும் 2வது கணவரிடம் ஜீவனாம்சம் கோரலாம்!. உச்சநீதிமன்றம் அதிரடி!

Supreme Court: ஒரு பெண் தனது முதல் கணவருடனான திருமணம் சட்டப்பூர்வமாக முறிக்கப்படவில்லை என்பதற்காக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 இன் கீழ் தனது இரண்டாவது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தன் இரண்டாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவருக்கு, மாதம், 5,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஹைதராபாத் உயர் நீதிமன்றம், 2017ல் ரத்து செய்தது. இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு, இந்தப் பெண்ணுக்கு, ஹைதராபாதில், 1999ல் முதல் திருமணம் நடந்துள்ளது. அதற்கடுத்த ஆண்டில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து, 2005ல் நாடு திரும்பிய பின், கணவன் – மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதே, 2005ல் தன் வீட்டுக்கு அருகில் உள்ளவரை, அந்தப் பெண் திருமணம் செய்துள்ளார். ஆனால், இது தொடர்பாக, ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில், இருவரும் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு, 2008ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து, 2012ல் விவாகரத்து கோரியுள்ளனர்.

தன் மனைவிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம், இரண்டாவது கணவருக்கு தெரியும். அதனால், மோசடி செய்ததாக கூற முடியாது. அதுபோல, தன் முதல் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் எதையும் இந்தப் பெண் பெறவில்லை. தன் முதல் கணவருடன் ஒப்பந்தம் செய்தாலும், சட்டப்பூர்வமாக அதை ரத்து செய்யவில்லை. முதல் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறாததால், இரண்டாவது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோருவதற்கு அந்தப் பெண் ணுக்கு உரிமை உள்ளது. ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த உத்தரவுகளில், ஜீவனாம்சம் என்பது அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும் நிவாரணம் அல்ல. கணவருக்கான சட்டப்பூர்வமான மற்றும் தார்மீக கடமையாகும். அந்த வகையில், இரண்டாவது கணவர், ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Readmore: ”ஆட்சியை கைப்பற்றி இருப்போம்”..!! ”சீமானால் எல்லாம் போச்சு”..!! ”பின்னாடி யாரோ இருக்காங்க”..!! விரைவில் ஆதாரத்துடன் அறிவிப்பு..!!

English Summary

Even if you don’t get a divorce from your first husband, you can still claim alimony from your second husband! Supreme Court takes action!

Kokila

Next Post

”நடிகர் சோனு சூட்டை கைது செய்து நீதிமன்றம் முன் நிறுத்துங்கள்”..!! காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்ட நீதிபதிகள்..!!

Fri Feb 7 , 2025
The Ludhiana court's order to arrest actor Sonu Sood has come as a shock.

You May Like