fbpx

தமிழ்நாட்டில் இன்றைக்கும் சம்பவம் இருக்கு..!! மக்களே பார்த்து வெளிய போங்க..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் இன்றும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், அதிக வெப்ப அழுத்தம் நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ஒருசில இடங்களில் இயல்பில் இருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும், நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகஸ்ட் 7ஆம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

நீங்கள் 10ம் வகுப்பு படித்திருக்கிறீர்களா……?உங்களுக்காக தபால் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு உடனே முந்துங்கள்…..!

Sat Aug 5 , 2023
இன்று பல்வேறு வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்த வாடிக்கையாளர்கள் அனைவரும், அந்த வங்கிகளின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தபால் துறையை நாடி வருகிறார்கள். இந்த தபால் துறை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், இதில் குளறுபடிகளோ அல்லது ஏமாற்றும் செயலோ நடைபெறுவது மிகவும் கடினம் என்பதால், மக்கள் இந்த தபால் துறையை நாடி வருகிறார்கள். தபால் துறையில், டெபாசிட் […]

You May Like