fbpx

கள்ளக்காதல் எரித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரர் மனைவி.! காதலன் மருத்துவமனையில் அனுமதி.!

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் காக்காங்கரை நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கமலேசன் இவருக்கு திருமணமாகி மஞ்சு என்ற மனைவி இருந்தார். ராணுவ வீரரான கமலேசன் 2013 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மனைவி மஞ்சுவிற்கு அதை பகுதியைச் சேர்ந்த குப்பன் என்ற 51 வயது நபருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சில காலமாக மஞ்சு வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குப்பன் அடிக்கடி மஞ்சுவுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் தன்னுடைய பணத்தையும் திரும்ப கேட்டு பிரச்சனை செய்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மஞ்சு வீட்டிற்கு சென்ற குப்பம் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை மஞ்சுவின் மீது ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து மஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சு தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குப்பனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்த குப்பனுக்கும் கையில் தீக்காயங்கள் இருந்ததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

வேகமாக பரவும் ஜேஎன் 1 வகை கொரோனா.! தடுப்பூசிகளால் தடுத்து நிறுத்த முடியுமா.? மருத்துவர்களின் விளக்கம்.!

Wed Dec 20 , 2023
தற்போது ஜேஎன்1 வகை கொரோனா தொற்று நாடெங்கிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. கேரளாவில் கண்டறியப்பட்டு இருக்கும் இந்த புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. புதிய கொரோனா தொற்று குறித்த அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இன்னிலையில் நாம் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் இதற்கு பலனளிக்குமா என மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கேரளாவை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு ஜேஎன் 1 வகை […]

You May Like