fbpx

“அவங்க திறக்கலாம்.. நாங்க பூட்டியாச்சு..” பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் வியூகங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று வந்த அதிமுக அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியதோடு பிஜேபி கட்சியுடன் உறவையும் முறித்துக் கொண்டது. இனி எந்த காலத்திலும் பிஜேபியுடன் கூட்டணி இருக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தமிழகத்தில் அதிமுக கட்சிக்கு தங்களது கதவு எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என கூட்டணிக்கு அழைப்பு கொடுத்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர் . அப்போது பதிலளித்த அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பேசிய ஜெயக்குமார் ” அதிமுக கட்சி தொண்டர்களின் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முடித்துக் கொண்டது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை. அதிமுக பிஜேபியுடன் என்றும் கூட்டணி அமைக்காது. பிஜேபி கூட்டணிக்கான கதவை திறந்து வைக்கலாம். ஆனால் அதிமுகவின் கதவு பிஜேபிக்காக மூடப்பட்டுவிட்டது. அது ஒரு போதும் திறக்காது என தெரிவித்துள்ளார். மேலும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதிமுக தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Post

ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மானியம்.! மாநில அரசு செய்யவிருக்கும் தரமான சம்பவம்.!

Wed Feb 7 , 2024
மாதம் ₹6000 குறைவாக வருமானம் ஈட்டும் ஏழை குடும்பங்களுக்கு, சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தலா ₹2 லட்சம் நிதி உதவி வழங்க, பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 20 லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணையான ₹50,000த்தை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இவற்றில் பிகாரில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, 94 லட்சம் குடும்பங்களின் வருமானம் மாதத்திற்கு ₹6,000த்தை விடக் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. […]

You May Like