சென்னை மாநகர பகுதியில் பிரதாப் (34) எனபவர் தனது மனைவி சிந்தூரா மற்றும் மகள் ஆத்யா (4) ஆகியோருடன் வசித்து வருகிறார். அத்துடன் பிரதாபின் தாயார் ராஜாத்தியும் வசித்து வந்துள்ளார்.
பிரதாப் ஹைதராபாத்திலுள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். மனைவி சிந்தூரா, அதே பகுதியில் ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், இவர்கள் அனைவரும் ஹைதராபாத் தர்னாகா என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். பொங்கல் பண்டிகை தினத்திலும் இவர்கள் தங்கியிருந்த வீடு காலை முதல் இரவு வரை திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், தர்னாகா பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 4 பேர் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். பிரதாப் மட்டும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. மற்றவர்கள் மர்மமான முறையில் வீட்டில் ஆங்காங்கே சடலமாக கிடந்தனர். அதனால், இதனை மர்மச்சாவு என்று காவல்துறைனர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.