நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் உறுப்பு தானம் செய்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த கணவன்-மனைவி உட்பட 3 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்து நெகிழ வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என தொண்டர்க்ளுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனால், பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தாம்பரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த கணவன், மனைவி உட்பட 3 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து செய்துள்ளனர். தங்களது மறைவுக்கு பின்னர் தங்களது அனைத்து உடல் உறுப்புகளும் தானமாக எடுத்துக் கொண்டு பிறருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என தாம்பரம் மருத்துவமனையில் பதிவு செய்து கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னாக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த செல்வம் மற்றும் அவரது மனைவி சுசித்ரா மற்றும் குன்றத்தூர் தவெக நிர்வாகி நெப்போலியன் ஆகியோர் உடலுறுப்புகளை தானம் செய்தது அனவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.