fbpx

இரவில் விவசாய நிலத்தை காவல் காப்பதற்காக சென்ற நபர்….! காலையில் காத்திருந்த அதிர்ச்சி, கதறிய உறவினர்கள், என்ன நடந்தது தெரியுமா….?

அரியலூர் அருகே விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக இரவு விவசாய நிலத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். ஆகவே, நாள்தோறும் இரவு நேரத்தில், தன்னுடைய விவசாய நிலத்திற்கு காவல் காப்பதற்காக செல்வதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு அவர் வயலுக்கு காவல் காப்பதற்காக சென்றார். ஆனால், மீண்டும் காலை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், வயலுக்கு சென்று பார்த்த போது, மணி மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி உறைந்து போயினர்.

இந்த சம்பவம் தொடர்பாக, கீழப்பழுர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வரை இந்த காவல்துறையினர் மணியின் உடலை கைப்பற்றி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு, மோப்பநாய் உதவியோடு, காவல்துறையினர் பல்வேறு விதத்தில், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

விண்வெளியில் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்?… திக் திக் பயணத்தில் யாரும் அறிந்திடாத சில தகவல்கள்!

Wed Aug 23 , 2023
விண்வெளி பயணத்தின்போது எதிர்பாராத விதமாக ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து பார்க்கலாம். விண்வெளிக்கு செல்வது என்பது இப்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆனால் அங்கு செல்பவர்கள் சிலரும் இறக்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு நாசா நிலவுக்கு ஒரு குழுவையும் 2030 ஆம் ஆண்டு பிறகு பத்து ஆண்டுகளில் செவ்வாய்க்கு ஒரு குழுவையும் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் […]

You May Like