fbpx

BREAKING : “டெல்லி நோக்கி செல்வோம்” பேரணியை தற்போதைக்கு நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு…!

டெல்லி நோக்கி செல்வோம்” பேரணியை தற்போதைக்கு நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 13-ம் தேதி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.‌

நேற்று விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நள்ளிரவு 1 மணி வரை 4 வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. மத்திய அரசு முன்வைத்த திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். “டெல்லி நோக்கி செல்வோம்” பேரணியை தற்போதைக்கு நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 2 நாட்களுக்கு பிறகு டெல்லி சலோ போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்..!! நடிகர் விஜய் பங்கேற்கிறாரா..?

Mon Feb 19 , 2024
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ஆம் தேதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்கிடையே, கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், கட்சியின் பெயரில் […]

You May Like