fbpx

#TnGovt: விவசாயிகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு…! இதை மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம்…

விவசாயிகள் டிஏபி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை நெல்லுக்கு அடி உரமாக பயன்படுத்து வேண்டும்.

இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான டிஏபி உரங்கள் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இறக்குமதியின்போது சில நேரங்களில் கப்பல் பற்றாக்குறை அல்லது துறைமுகங்களில் இட நெருக்கடி போன்ற காரணங்களினால் டிஏபி உரத்தை துறைமுகத்தில் இறக்கி, மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சிலசமயம் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இதுதொடர்பாக, ஒன்றிய அரசின் உரத்துறையானது, டிஏபி உரத்துக்கு மாற்றாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடி உரமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது. அதன்படி, 9 கிலோ தழைச்சத்தும், 23 கிலோ மணிச்சத்தும் உள்ள 50 கிலோ டிஏபி உரத்திற்கு மாற்றாக, அடி உரமாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை கீழ்க்கண்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

3 மூட்டை (150 கி.) சூப்பர் பாஸ்பேட்டும், 20 கிலோ யூரியாவும் அல்லது ஒரு மூட்டை (50 கி.) 20:20:0:13 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் தேவைப்படும். கந்தகச்சத்து காம்ப்ளக்ஸ் உரத்தில் 13 சதமும் சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 11 சதமும் உள்ளதால், பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும். இதனால், டிஏபி இட்ட வயலைப் போன்றே, பயிர்வளர்ச்சி செழித்து, விளைச்சலும் அதிகரிக்கும். தற்போது, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் காம்ப்ளெக்ஸ் உரமும், சூப்பர் பாஸ்பேட் உரமும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடியுரமாக பயன்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

காமன்வெல்த் போட்டி.. பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம்.. அச்சிந்தா ஷூலி அசத்தல்

Mon Aug 1 , 2022
காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.. 2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி கடந்த 28-ம் தேதி முதல் இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. 72 நாடுகள், 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.. இதில் இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.. இந்நிலையில் ஆண்களுக்கான பளு தூக்குதலின் […]

You May Like