fbpx

“இரக்கமற்ற சம்பவம்…” 12 வயது புற்றுநோயாளி மகனை கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர தந்தை .!

மகனுக்கு கேன்சர் வந்ததால் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சாதாரா மாவட்டம், ஹிவார்னே கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் கட்டல். இவருக்கு 12 வயதில் மகன் இருந்தான். இந்நிலையில் சில நாட்கள் உடல் நலம் பாதிப்பால் மகன் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மருத்துவ பரிசோதனைக்காக தந்தை அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது மகனுக்கு புற்று நோய் இருப்பது உறுதியானது.

இந்நிலையில் புற்றுநோயால் மகன் மிகவும் கஷ்டப்படுவான் என்று நினைத்து தந்தை வருந்தி இருக்கிறார். மேலும் தனது மகன் நோயால் கஷ்டப்படக் கூடாது என எண்ணிய தந்தை அவனது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொடூரமாக கொலை செய்திருக்கிறார். மேலும் இறந்த பின்பு சிறுவனின் உடலை ஊரிலிருந்து தூரமாக இருக்கும் பகுதி ஒன்றில் வீசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக மகனை காணவில்லை என காவல்துறையிலும் புகார் தெரிவித்துள்ளார் .

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சிறுவனின் தந்தையை பிடித்து விசாரித்ததில் நடந்த உண்மை சம்பவம் வெளியாகி இருக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் தந்தையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Post

67 வயது முதியவரின் சேட்டை.! சிறுமிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு.! போக்சோவில் தூக்கிய போலீஸ்.!

Fri Dec 29 , 2023
சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை புழல் பகுதிக்கு அருகில் உள்ள சக்திவேல் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 67 வயதான இந்த முதியவர் சோபா மெத்தை பழுது நீக்கும் பணி செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் […]

You May Like