fbpx

#சிவகாசி : மகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை..!

சிவகாசி அருகே பெர்நாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன் மற்றும் உமய லட்சுமிக்கு 9 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். இவரது மனைவி உமயலட்சுமி 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கடந்த ஆண்டு அவரது சகோதரி ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக ராதிகா தனது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த மன உளைச்சல் காரணமாக அவர் தனது 9 வயது மகள் அபிநயாவுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் கணேசன்.

இதனை தொடர்ந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து என்ன நடந்தது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

மீண்டும் உலகை உலுக்கும் ஓமிக்ரான் BF-7 .. சீனாவில் தொடக்கம்..! 

Thu Dec 22 , 2022
கடந்த இரண்டு வருடங்களாக உலக அளவில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பிறகு, வாழ்க்கை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது, பின்னர் அது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது, ​​சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைவரும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெற வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் […]

You May Like