fbpx

இன்சுரன்ஸ் தொகையை பெற செட்டப் விபத்து..! தந்தை மகன் போட்ட ஸ்கெட்ச்.. அலேக்கா தூக்கிய போலீஸ்..!! 

மகன் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி ரூ.2 கோடி இன்சுரன்ஸ் பணம் பெற முயன்ற தந்தை மகன் உட்பட 3 பேர் கைதாகினர்.

டெல்லியைச் சேர்ந்த ககன் என்பவருக்காக அவரது தந்தை ரூ. 2கோடி மதிப்புள்ள பீமா பாலிசி எடுத்தார். பின்னர், ககன் விபத்தில் இறந்ததாக பொய்யான ஆவணங்கள் தயாரித்து, விபத்து இன்சுரன்ஸ் தொகையை பெற முயன்றனர். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, அவர்கள் ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் போலி மரணச் சான்றிதழ், விபத்து அறிக்கை போன்றவற்றை தயாரித்து பணம் பெற முயன்றுள்ளனர்.

இருப்பினும் இன்சுரன்ஸ் நிறுவனத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதால், அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விபத்து நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அது செட்டப் செய்யப்பட்ட விபத்து என்பதை போலீசார் கண்டறிந்தனர். ககன் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது. இதனால், தந்தையும் மகன் மற்றும் வழக்கறிஞர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பீமா மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களும், பீமா நிறுவனங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சபவம் சுட்டிக்காட்டுகிறது. இன்சுரன்ஸ் தொகையை பெற மகன் விபத்தில் இறந்துவிட்டதாக தந்தை கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: டாஸ்மாக் ரெய்டு விவகாரம்: தமிழக அரசு நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு..!! – அமலாக்கத்துறை குற்றசாட்டு

English Summary

Father Staged Crash To Declare His Living Son Dead In Order To Claim Rs 2 Crore Insurance; Arrested

Next Post

ரசிகர்களே உஷார்..!! சேப்பாக்கம் மைதானத்தில் CSK vs RCB போட்டியின்போது செல்போன் திருடிய வடமாநில கும்பல்..!! 36 ஃபோன்கள் பறிமுதல்..!!

Tue Apr 1 , 2025
Police arrested 8 people from the northern state who stole 36 cell phones during an IPL match held in Chepauk, Chennai.

You May Like