விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த மாணவி கல்லூரி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவை பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த கவுண்டர் மில்ஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து எந்த மாணவி ஸ்ரீ வர்ஷா. இவர் நேற்று தனது கல்லூரியில் அமைந்துள்ள கழிப்பறையில் சாணி பவுடர் என்ற விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சாணி பவுடரை குடித்ததால் கழிவறையில் வாந்தி எடுத்து மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்க அவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மாணவியின் பெற்றோர் கல்லூரி இறுதி ஆண்டு என்பதால் மாணவிக்கு இப்போதே திருமணத்திற்கு வரன் பார்த்ததாகவும் அதில் மாணவிக்கு விருப்பம் இல்லாததை அவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கட்டாயமாக திருமணம் செய்ய வற்புறுத்தியதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி கல்லூரி வளாகத்தில் விஷத்தை குடித்துவிட்டு தற்கொலைக்கும் என்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.