தற்போது உள்ள காலகட்டத்தில், நாகரீகம் என்ற பெயரில் வாழ்க்கை மற்றும் உணவு முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதனுக்கு நாளுக்கு நாள் புது புது வியாதிகள் ஏற்படுகின்றனது. அதிலும் குறிப்பாக, இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெரியவர்கள் மட்டும் இல்லாமல், பள்ளி செல்லும் சிறுவர்களும் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பது தான் நல்லது. அந்த வகையில், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கவும். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது தான் ஒரே வழி. ஆனால் நமது உணவு முறை தான், இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் நீங்களும் உங்கள் இருதயமும் ஆரோக்கியமாக இருக்க ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஆம், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 80 சதவீதம் முக்கிய பங்கு நாம் சாப்பிடும் சாப்பாடு தான் வகிக்கின்றது. எனவே இதய நோயாளிகள் மட்டும் இல்லாமல், அனைவரும் உங்களது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். அந்த வகையில், கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகளில் இருந்து சற்று விலகி இருப்பது தான் நல்லது. அப்படி, இதய நோயாளிகளின் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் சில உணவுகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
இதய நோயாளிகள் அளவுக்கு அதிகமாக காஃபி குடிக்க கூடாது. காபியில் இருக்கும் காஃபின், ரத்த அழுத்தத்தை அதிகரித்து விடும். நாள் ஒன்றுக்கு இரண்டு கப் காபி குடிக்கலாம். ஆனால் அதற்கு மேல் குடிக்க கூடாது. பழச்சாறுகளில் சர்க்கரை அதிகம் சேர்ப்பதால் அது இதயத்திற்கு நல்லதல்ல. இதனால், இதய நோயாளிகள், பழத்தின் சாற்றை குடிப்பதற்கு பதில், அதை பழமாக சாப்பிடுவது தான் நல்லது.
முட்டை நல்லது தான், ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் அதிகளவு கொழுப்பு மற்றும் சத்துக்கள் உள்ளதால், அது கொலஸ்ட்ரால் ஆபத்தை அதிகரிக்க செய்து விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதய நோயாளிகள், வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட வேண்டும். மேலும், பிஸ்தா, மாவு வகை பொருட்களை சாப்பிட கூடாது.
Read more: முருங்கை கீரையை, கட்டாயம் இப்படித் தான் சுத்தம் செய்ய வேண்டும்..