தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தனி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இந்த சூழலில் வருகின்ற 31-ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வெழுதிய மையங்களில் பெற்று கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்ற ஜூலை , ஆகஸ்ட் 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை , மதிப்பெண் பட்டியல்களை 31.10.2022 முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை தேர்வர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.