fbpx

காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்…!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்.

கம்பம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுரத்தர் ஹவுதியா கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பையும், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் எம்ஏ படிப்பையும், சென்னை சட்டக்கல்லூரியில் பிஎல் படிப்பையும் முடித்துள்ளார். 1991 பொதுத் தேர்தலில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1996, 2001 என அடுத்தடுத்த தேர்தல்களிலும் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்தபோது தேனி மாவட்ட தலைவர், பின்னர் மாநில துணைத் தலைவர், கள்ளர் கல்விக் கழகத்தில் 15 ஆண்டுகள் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். தற்போது தமாகா-வில் மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினராகவும், கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும், தேர்தல் பிரிவு மாநிலத் தலைவராகவும் இருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட அவர், நேற்று காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

English Summary

Former Congress MLA OR Ramachandran passed away due to ill health.

Vignesh

Next Post

'உலகின் கொடிய உணவு' ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் வரும்!. எச்சரிக்கை..!

Sat Oct 5 , 2024
Warning if you are going to Thailand! This is the 'world's deadliest food'! Eating one mouthful can cause cancer!

You May Like