நாள்தோறும் நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் வெளியிடப்படுகிறது. ஆகவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், நம்முடைய நிறுவனத்தை பின் தொடர்ந்தால், அவர்களுக்கான வேலை வாய்ப்பை நிச்சயம் மிக விரைவில் பெறலாம்.
அந்த வகையில், இன்று இந்திய அஞ்சல் துறையில், கிராமின் டக்சேவக்ஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கான விண்ணப்ப கடைசி தேதி ஆகஸ்ட் 23 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அஞ்சல் துறையில் காலியாக இருக்கின்ற, 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான தேடல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை என்பது, இணையதளம் மூலமாக மட்டுமே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சென்ற மூன்றாம் தேதி முதல் இந்த மாதம் 23ஆம் தேதி வரையில், அதாவது, 20 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் இதற்கு விண்ணப்பம் செய்வதற்கு, நான்கு நாட்கள் மட்டுமே மீதம் இருப்பதால், உடனடியாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால், போதும் என்று கூறப்படுகிறது. மேலும், வயது வரம்பு என்பது 18 வயதில் இருந்து, 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அத்துடன், மாத ஊதியம் 12000திலிருந்து, 29,380 ரூபாய் வரையில் வழங்கப்படும்.