fbpx

இலவச வாக்குறுதி.. உறுதியான முடிவெடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்..? உச்சநீதிமன்றம் கேள்வி..

இலவச வாக்குறுதி விவகாரத்தில், மத்திய அரசு ஏன் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்குகிறது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது..

அஸ்வினி உபாத்யாயா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் “ ஏராளமான அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன.. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் இதுபோன்ற இலவச வாக்குறுதிகளை வழங்குவதாகவும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.. அதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், இது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விவகாரம் என்று தெரிவித்தார்..

அப்படி எனில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு செய்வதற்கு எதுவும் இல்லை என்று நாங்கள் பதிவு செய்து கொள்ளலாமா என்று கேள்வி நீதிபதி, இந்த விவகாரத்தில் உறுதியான முடிவெடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்றும் வினவினர்.. நிதி ஆணையம் இந்த விவகாரத்தில் கவன செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி, மத்தியஅரசு இதில் உரிய தீர்வு காண முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.. மேலும் இதில் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்..

Maha

Next Post

விஜயகாந்த் வேண்டுகோள்.. மாணவிகளின் மர்ம மரணங்கள்; ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை குழு தேவை..!

Tue Jul 26 , 2022
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை; மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள், திருவள்ளூரில் இன்னொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தைத் தொடர்ந்து, சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்ட சம்பவமும், மேலும் திருப்பூரில் அரசு உதவி […]

You May Like