மிக்ஜாம்’ புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிச.14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது; வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
அண்மையில் ஏற்பட்ட “மிக்ஜாம்” புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்து உற்பத்தியிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4800 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இடைவிடாத பெரு மழையினால் அதிகமான பாதிப்பிற்குள்ளானது மட்டுமல்லாமல் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது.
மழை வெள்ளத்தால் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் சுகாதார ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சூழலில் சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிச.14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது; வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.