fbpx

பிரபல ‘யூடியூபர்’ மரணம்.!! பார்ட்டியில் நண்பர்கள் செய்த கொடூரம்.! விசாரணையில் காவல்துறை.!

கிரேட்டர் நொய்டாவில் பிரபல யூடியூபர் தீபக் நாகர், தனது நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள டான்கூர் பகுதியில் உள்ள முகமதுபூர் குர்ஜார் கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல யூடியூபர் தனது நண்பர் அளித்த மதுபான விருந்தில் கலந்துக்கொண்டார். மனீஷ் என்ற அவரது நண்பர் தனது உடைமையை ரூபாய் 60,000க்கு விற்றதால் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது.

பார்ட்டியின் போது மனீஷுக்கும் தீபக் நாகருக்கும் வாய்த் தகராறு மூண்டது. பின்பு அது கைக்கலப்பில் முடியவே, மனீஷ் உடன் இருந்த ஆறு நண்பர்களும் சேர்ந்து அங்கிருந்த கட்டைகளை எடுத்து, தீபக்கை பலமாகத் தலையில் தாக்கினர். அப்போது அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

இதில் காயமடைந்த தீபக்கை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை அதிகாரிகள் மனீஷ், பிரின்ஸ், விக்கி, யோகேந்திரா, விஜய், கபில் மற்றும் மின்கு ஆகிய ஏழு பேரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபக் நாகர், கடந்த ஐந்து வருடமாக யூடியூபில் வீடியோக்களை செய்து பதிவேற்றி வருகிறார். அவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

’இனி 12 மணி நேரம் வேலை’..!! ’3 நாட்கள் விடுமுறை’..!! பட்ஜெட்டில் புதிய அறிவிப்பை வெளியிடுகிறது மத்திய அரசு..?

Tue Jan 30 , 2024
2024 பட்ஜெட்டில் புதிய விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் பரவுகின்றன. இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி சமீபத்தில் இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், 6 நாள் வேலை என்று வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு சுமார் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் மத்திய அரசு 2024 பட்ஜெட்டில் புதிய விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த […]

You May Like