உத்தரபிரதேசம் மாநில பகுதியில் வசிக்கும் இளைஞன் தன் காதலி தனக்கு துரோகம் செய்ததாக கூறி பேஸ்புகில் லைவ் மூலம் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக்கில் லைவ் வீடீயோவில், அந்த இளைஞன் தான் காதல் செய்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்து திட்டியுள்ளார். இந்த நிலையில் , பலரும் அவரை தற்கொலை செய்ய விடாமல்தடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி மிக வேதனையுடன் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், காதலித்த பெண்ணிற்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாகவும், காதலியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மனவேதனையுடன் இருந்த அந்த நபர் , பேஸ்புக் லைவ்வில் காதலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரைக் கூறிகொண்டே கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.