fbpx

கட்டட மேஸ்திரியுடன் உல்லாசம்..!! கழற்றிவிட முயன்ற பெண்..!! சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

காணாமல் போன பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக அவரது கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலசக்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (31). இவரது மனைவி வைஜெயந்தி (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வைஜெயந்தி கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற வைஜெயந்தி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ரவிசங்கர், பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்.

எங்கு தேடியும் கிடைக்காததால், சிலைமான் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஜெயந்தியை தேடி வந்தனர். இதற்கிடையே, மதுரை விரகனூர் அருகே வைகையாற்று பகுதியில் பாதி எரிந்த நிலையில், பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது ரவிசங்கரின் மனைவி வைஜெயந்தியின் உடல் என தெரியவந்துள்ளது.

பின்னர், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் வைஜெயந்தியில் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது சந்தேகத்தின் பேரில் கருப்பையா (45) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், கருப்பையா தனது நண்பர் ஜெயகாந்தனுடன் சேர்ந்து வைஜெயந்தியை மணலூர் வைகை ஆற்றில் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், “கட்டட கட்டுமானப் பணியின்போது, கொத்தனார் கருப்பையாவுக்கும் சித்தாளாக பணியாற்றி வந்த வைஜெயந்திக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே, வைஜெயந்தி வேறு யாருடனோ பழகுவதாக கருப்பையாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கருப்பையா தனது நண்பரான ஜெயகாந்தனுடன் சேர்ந்து வைஜெயந்தியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த 21ஆம் தேதி இரவு வைகை ஆற்றுக்கு வரவழைத்து கருப்பையாவும், ஜெயகாந்தனும் சேர்ந்து வைஜெயந்தியை கொலை செய்து உடலை எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read More : ஒரே நாளில் ரூ.200 கோடியை நெருங்கிய “Kalki 2898 AD”..!! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

English Summary

Two people, including her boyfriend, have been arrested in connection with the incident where the missing woman was murdered and her body recovered.

Chella

Next Post

'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியால் விரக்தி அடைந்த மைம் கோபி..!! அவரு சொன்ன காரணத்தை பாருங்க..!!

Fri Jun 28 , 2024
Mime Gopi, who emerged as the title winner on Cook with Komali Season 4 on Vijay TV, has openly spoken about her experience on the show.

You May Like