fbpx

கஞ்சா கடத்தல் வழக்கு : குண்டர் சட்டத்தில் பாஜகவினர் அதிரடி கைது….! தட்டி தூக்கபட்ட 13 பேர்…..! 

தூத்துக்குடி அருகே கடந்த 28ஆம் தேதி, அதாவது, நேற்றைய தினம் புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், இரண்டு கார்களில், கடத்தி வரப்பட்ட சுமார் 228 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதனை கடத்தி வந்த 13 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆரோன், இசக்கி, கணேஷ், சரவணன், ராஜா, சஜின் ரெனி, திருமணிகுமரன், மணிகண்டன், காளீஸ்வரன், விக்னேஸ்வரன், திருமேனி, சம்பத்குமார், தயாளன், அருண்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்ய மாவட்ட காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

மதுவிலக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த பரிந்துரையை மேற்கொண்டதை தொடர்ந்து, மாவட்ட துணை கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவருக்கு பரிந்துரை கடிதத்தை அனுப்பினார். ஆகவே மாவட்ட ஆட்சி தலைவர், செந்தில் ராஜ் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை தொண்டர்கள், தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். ஆகவே, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சிவசுப்பு, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை மதுரை சிறையிலும், மற்ற 12 பேரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தார்.

Next Post

பரபரப்பு வச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு....! பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா....?

Fri Sep 29 , 2023
தர்மபுரி அருகே வச்சாத்தி என்ற மலைக்கிராமத்தில் 18 பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்க உள்ளது. ஆனால், இந்த நீதிமன்ற தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு மன நிம்மதியை வழங்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், கடந்த 1992 ஆம் வருடம் வருவாய் துறை வனத்துறை […]

You May Like