கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரத்தில் ராட்சத விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அந்த விளம்பர பலகை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விளம்பர பலகை கட்டும் பணியின் போது, அந்த விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் ராட்சத விளம்பர பலகைகள் வைப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.