அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள வடக்கு கரோலினாவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்காக ட்ரக் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் வாகனத்தின் பின்பக்கமாக இணைக்கப்பட்ட மிதவையில் சில நடனக் குழு கலைஞர்கள் அமர்ந்திருந்ததில் ஐந்து வயதுக்குட்பட்ட சில குழந்தைகளும் அதில் அமர்ந்திருந்தனர்.கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அந்த வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து அங்குள்ள ஒரு சிறுமி மீது மோதியது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்ட மக்கள் மற்றும் சில அதிகாரிகள் வெகுவாக சென்று வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து அங்கே இருந்த மற்ற அணிவகுப்பாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து, மன வைதனை அடைந்தனர். அத்துடன் அந்த வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரின் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், வாகனத்தினால் ஏற்படுத்தப் பட்ட தவறான மரணம், முறையற்ற உபகரணங்கள், பாதுகாப்பற்ற இயக்கம் மற்றும் விபத்திற்கு பிறகு அணிவகுப்பில் துப்பாக்கியை எடுத்துச் சென்றது என இந்த குற்றச்சாட்டுகளை அவரின் மீது தொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிறுமியின் உயிரிழப்பால் ராலே என்கிற கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது.