fbpx

விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! ரூ.78.67 கோடி ஒதுக்கீடு..!! தமிழக வேளாண்துறை அறிவிப்பு..!!

டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தை தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல முன்னோக்கு திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை நீர், தமிழகத்தின் நெற்களஞ்சியமாகிய காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜூன் 12ஆம் நாள் திறந்து விடப்படுவது மரபு.

எதிர்பாராத சூழ்நிலைகளால் பருவமழை காலந்தாழ்த்தி இருப்பதால் இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், டெல்டா சாகுபடிக்கு நீரை திறந்து விட காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த மனவேதனையை தந்தாலும் வேளாண்மை மக்களின் நலனை முன்னிறுத்தி ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை விவசாயிகள் நலன் கருதி கீழ்க்கண்டவாறு வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1,00,000 இலட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூபாய் 3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும். நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதம், 1 இலட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும். நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 இலட்சம் வழங்கப்படும். துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு ஏக்கருக்கு 250 ருபாய் வீதம், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திரக் கலப்பை, சுழற் கலப்பை, சாகுபடிக் கலப்பை, பலதானியப் பிரித்தெடுக்கும் கருவி, ஆளில்லா வானூர்திக் கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் வழங்கிட மானியமாக ரூ.7 கோடியே 52 இலட்சம் நிதி வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் வேளாண் பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேற்கண்டவாறு, அரசு நிதியில் இருந்து நிதி பெற்றும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும், ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Western Toilet-ஆல் இத்தனை பாதிப்புகள் வருமா..? இந்தியன் டாய்லெட் சிறந்ததா..? எது பெஸ்ட்..?

English Summary

Tamil Nadu Department of Agriculture has announced the special package scheme for cultivation of Delta Kuruai.

Chella

Next Post

Google Pay, PayTM-ல பணத்தை மாத்தி அனுப்பிட்டீங்களா..? இத மட்டும் செய்ங்க.. உடனே Refund ஆகிடும்!!

Fri Jun 14 , 2024
You don't need to go to the bank to send money to someone's bank account.. With UPI, Net Banking, Mobile Wallet, you can make money transactions in seconds

You May Like