fbpx

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய அரசு ஊழியர்….! தட்டி தூக்கிய காவல்துறையினர்….!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மைனர் சிறுமிக்கு, அரசு ஊழியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் கரெளலி மாவட்டத்தில் இருக்கின்ற தோடாபிம் நகரில், பொது சுகாதாரத்துறை ஊழியர் ஒருவரால், ஒரு சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் ஐபிசியின் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட நபர், பொது சுகாதார துறையின் நிர்வாக பொறியாளரின் மூத்த உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

அதோடு, அவர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட விவகாரம் தெரிந்தவுடன், உடனடியாக அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கை நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். அதோடு, இந்த சம்பவம் குறித்து, அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கையும் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. என்று துறை ரீதியாக பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பி.எச்.இடியில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வந்த கரோடிலால் மீனாவும், இந்த விவகாரத்தில், குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை பாதுகாப்பது மற்றும் சாட்சியங்களை சிதைப்பது, அதோடு, வழக்கின் விசாரணையை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

Next Post

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி..… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

Mon Aug 14 , 2023
சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் செல்ல சிறுவர்களுக்கு இன்றுமுதல் அனுமதி இல்லை என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த, சிறுவனை சிறுத்தை ஒன்று வாயில் கவ்விச் சென்றது. பெற்றோர் […]

You May Like