fbpx

அசத்தும் தமிழக அரசு… பதிவுத்துறை அலுவலகங்களை பார்வையிட்ட மகாராஷ்டிரா குழு…!

மகாராஷ்டிரா மாநில பதிவுத்துறையில் இருந்து கூடுதல் பதிவுத்துறை தலைவர் தலைமையிலான அலுவலர்கள் குழு ஒன்று ஜனவரி 22 முதல் 24 வரை தமிழ்நாடு பதிவுத்துறை அழுவலகங்களை பார்வையிட்டனர். பதிவுத்துறைத்தலைவரை சந்தித்து தமிழ்நாட்டின் பதிவுத்துறையின் மேம்பட்ட சிறப்பான செயல்பாடுகள் மற்றும் பதிவுத்துறையின் முன்னோடி திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்டனர்.

இது குறித்து தமிழக பத்திர பதிவுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பதிவுத்துறையில் பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முழுவதுமாக இணைய வழியாக முத்திரைதீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்துதல், பதிவு செய்த பின்னர் உடனடியாக பத்திரங்களை திரும்ப வழங்குதல், பதிவு செய்கு பின்னர் உட்பிரிவு இல்லாது இனங்களில் உடமையாக பட்டாமாதல் செய்கும். நம்பிக்கை இணையம் உட்பட பல முன்னோடித்திட்டங்கள் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

22.01.2025 முதல் 24.01.2025 வரைா மாநில பதிவுத்துறையில் இருந்து கூடுதல் பதிவுத்துறை தலைவர் தலைமையிலான அலுவலர்கள் குழு ஒன்ற பதிவுத்துறை அலுவலகங்களை பர்வையிட்டனர். பின்னர் பதிவுத்துறைத்தலைவரை சந்தித்து தமிழ்நாட்டின் பதிவுத்துறையின் மேப்பட்ட சிறப்பான செயல்பாடுகள் மற்றும் பதிவுத்துறையின் முன்னோடி திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்டனர். ஆவணங்களையும் ஒளிவருடல் (Scanning) செய்வதையும் மற்றும் இணையவழி வில்லங்கச்சான்று முறையை பார்வையிட்ட பின்னர் தமிழ்நாடு பதிவுத்துறையை பாராட்டினார்கள் மற்றும் நடைமுறையில் உள்ள ஸ்டார் 2.0 திட்டம் குறித்த விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Government… Maharashtra team visits Registrar’s Offices

Vignesh

Next Post

முதன்முறையாக, குடியரசு தின அணிவகுப்பில் ராணுவத்தைச் சேர்ந்த தந்தை-மகன் இருவரும் பங்கேற்பு!. சுவாரஸிய தகவல்!

Sun Jan 26 , 2025
For the first time, a father and son from the Army will participate in the Republic Day parade! Interesting information!

You May Like