fbpx

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி…! டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு…!

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் வெள்ளத்தில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்களை அரசு ஏற்பாடு செய்யும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தில் புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகளை இழந்த குழந்தைகளுக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Vignesh

Next Post

அட்டகாசம்...! பத்திர பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம்...! கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு...!

Mon Jul 17 , 2023
பத்திர பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பாக கமிட்டி அமைத்தும் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவு. பதிவுத்துறையில்‌ முன்னோடித்‌ திட்டமாக 06.02.2000 முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்‌’ திட்டம்‌ தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள்‌ அடைந்து கணினிமயமாக்கலில்‌ பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத்‌ திகழ வைத்துள்ளது. தற்போதுள்ள “ஸ்டார்‌ 2.0” திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ சேவைகளில்‌ செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின்‌ லேர்னிங்‌, பெருந்தரவு பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட […]

You May Like