பெண்களை காதலித்து ஏமாற்றிய லியாஸ் தமிழரசன் பாஜக அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பாக்கம், திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன். இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். இவர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் பழகி பின்னர் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை முறைப்படி திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் லியாஸ் தமிழரசன் அந்தப் பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும் அதனை அவருக்கு தெரியாமல் வீடியோவாக பதிவும் செய்தியை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் லியாஸ் தமிழரசன் பல இடங்களுக்கு அந்தப் பெண்ணை அழைத்து சென்று பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணிடம் இருந்து சிறுக, சிறுக பணமாக சுமார் 20 லட்சமும், நகையாக சுமார் 20 சவரனும் பெற்றுள்ளார். பின்னர் லியாஸ் தமிழரசனிடம் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது லியாஸ் தமிழரசன் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியும் உள்ளார்.
இந்த குட்ட சம்பவத்தில் ஈடுபட்ட நபர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளராக உள்ளார் என்ற செய்தி வெளியாகியது. இதற்கு பாஜக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10.02.2025, திங்கட்கிழமை அன்று, பத்திரிக்கைளிலும், தொலைக்காட்சிகளிலும், சென்னை, செம்பாக்கம் பகுதியை சேர்ந்த, லியாஸ் தமிழரசன் (வயது 25) என்பவர் பெண்களை ஏமாத்தி மிரட்டல் விடுத்ததாகவும் அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பாரதிய ஜனதா இளைஞரணியை சார்ந்தவர் என்று தவறான தகவல் வெளிவந்துள்ளதை அறிந்தேன்.
அவர் பாரதிய ஜனதா இளைஞரணியை சார்ந்தவர் இல்லை என்பதும், அவர் எங்கள் அதிகார பூர்வ எந்த பதிவேடுகளிலும் அவர் பெயர் இல்லை என்பதும் அவர் அடிப்படை உறுப்பினராகவும் இல்லை என்பதை இதன் மூலம் மறுப்பு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தந்தை R.ஏழுமலை செம்பாக்கம் பகுதி தி.மு.க கழக நிர்வாகியாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.