fbpx

என்னது முள்ளங்கி சாப்பிட்டால், பசி எடுக்குமா….? அடடே புது விஷயமா இருக்கே….!

நாம் அன்றாடம் நம்முடைய உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் ஒன்று தான் முள்ளங்கி. ஆனால், இந்த முள்ளங்கியில் இருக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பெரிதாக யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த முள்ளங்கியில் விட்டமின் பி, சி, கே பொட்டாசியம், நார்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதயத்தை பலப்படுத்துவதற்கு தேவைப்படும் அந்தோனிசியனின் முள்ளங்கியில் நிறைவாக இருக்கிறது.

முள்ளங்கி சாப்பிட்டு வருவதால், இரத்த அழுத்தம் சீராகி, இரத்த கொதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. முள்ளங்கி, இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. ஆகவே இரத்த சர்க்கரையை அது கட்டுக்குள் வைக்கிறது.

அத்துடன், உடலுக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் விட்டமின் சி முள்ளங்கியில் இருக்கிறது. இதை சாப்பிட்டு வருவதால், பசி அதிகமாக இருக்கும். முள்ளங்கி சாப்பிடுவதால், செரிமான மண்டலம் வலுவடைந்து, உணவு நன்றாக ஜீரணமாகும். மலக்குடலில் இருக்கின்ற கழிவுகளை நீக்கி, குடலை சுத்தம் செய்யும்.

அத்துடன், இந்த முள்ளங்கியை சாப்பிட்டு வருவதால், கல்லீரலில் இருக்கின்ற கழிவுகள் வெளியாகும். அதன் மூலமாக, உடல் சுத்தமாகிறது. முள்ளங்கியை தொடர்ந்து, சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Post

அமைச்சர் ரோஜாவின் கணவருக்கு எதிராக இப்படி ஒரு உத்தரவா..? அப்படி என்ன பண்ணாரு..?

Mon Aug 28 , 2023
விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் ரோஜாவின் கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தனர். அதில், பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களையும் கூறியிருந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த […]

You May Like