பொதுவாக குழந்தைகள் பசிக்கிறது என்று சொன்ன உடன், பெரும்பாலான பெற்றோர் முதலில் எடுத்து கொடுப்பது பிஸ்கட் தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரும்பாலான பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் பிஸ்கட். இன்னும் ஒரு சில தாய்மார்கள் 6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட்டை உணவாகவே கொடுப்பது உண்டு.
ஆனால் பிஸ்கட் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால், அதிக வெப்பநிலையில் பாமாயில், டால்டா போன்றவை பயன்படுத்தி தான் பிஸ்கட் தயாரிக்க்கபடுகிறது. இப்படி செய்வதால் உருவாக்கப்படும் டிரான்ஸ்ஃபேட் அமிலம், நமது உடலில் அதிகம் கலக்கும் போது, கொழுப்பு அதிகமாகி இதய நோய்கள் ஏற்படும்.
பொதுவாக பிஸ்கட் கெட்டுப்போகாமல் இருக்க, உப்பு அதிகம் பயன்படுத்தப்படும். இப்படி உப்பு அதிகம் கலக்கப்பட்ட உணவை சாப்பிடும் போது உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு விடும். பிஸ்கட் சுவையை கூட்ட பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்களும் உடலுக்குக் அதிக கேடு விளைவிக்கும். பிஸ்கட் தயாரிக்க பயன்படும் சுக்ரோஸ், குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும்.
மேலும், பிஸ்கட்டில் உள்ள சோடியம் பைகார்பனேட் நமது உடலில் அதிகளவு கலக்கும் போது, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதுடன், சிறுநீரகக் கல் உருவாகும் அபாயம் உள்ளது. அது மட்டும் இல்லாமல், உடலில் தேவையில்லாத கொழுப்புச் சத்து சேர்ந்து உடல் எடையும் கூடும். கலோரி குறைவாக உள்ளதாகக் கூறி பல பிஸ்கட்டுகள் விற்கப்படுகின்றன.
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டீ, காபி, பாலுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இப்படி செய்வதால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு பசி ஏற்படாது. இதனால் தான் பல குழந்தைகள் சாப்பாடு சாப்பிடுவது இல்லை. குழந்தைகள் மட்டும் இல்லாமல், நீங்களும் ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு கேடு மட்டுமே தரும் பிஸ்கட் சாப்பிடுவதை விட்டு விடுங்கள். ஒரு வேலை உங்கள் குழந்தைகள் பிஸ்கட் சாப்பிட ஆசைப்பட்டால், வாரத்தில் ஒரு முறை 2 பிஸ்கட் மட்டும் கொடுங்கள்..
Read More: பயணம் செய்தால் கால் ரொம்ப வீங்குதா? கவனம், இது பெரிய பிரச்சனையின் அறிகுறி!!!