fbpx

Rain Alert: காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டத்தில் இன்று கனமழை…!

தமிழகத்தில் இன்று 18 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 5-ம் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களிலும், 6-ம் தேதி சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 28 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Heavy rain today in 18 districts including Kanchipuram

Vignesh

Next Post

’உன் கூடவே எத்தனை நாளைக்கு அப்படி இருக்குறது’..? கள்ளக்காதலியின் குழந்தைகள் மீது ஆசைப்பட்ட கள்ளக்காதலன்..!! நடந்தது என்ன..?

Thu Oct 3 , 2024
According to the complaint filed by the child's father, Anand, Rajesh had been sexually harassing the children by often showing them obscene pictures, and the boy had died after being attacked by them in anger due to their shouting.

You May Like