சென்னை புழல் அருகே பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து கொலை செய்த கும்பலை காவல்துறை நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்து இருக்கிறது. மேலும் இந்த விசாரணையில் பல திடுக்கிட்டு உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றனர். சென்னை புழல் அசோகர் தெருவை சார்ந்தவர் சுதா சந்தர். இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி ரெட்டை ஏரி கல்பாளையம் அருகே ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த நாலு பேர் கொண்ட கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தது. இந்நிலையில் அவருடன் வந்த அந்தப் பெண்ணிடம் விசாரணை செய்ததில் பல உண்மைச் சம்பவங்கள் காவல்துறைக்கு தெரிந்திருக்கின்றன. அவருடன் வந்த பெண் பெயர் ராகினி. இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. ராகினியும் சுதா சந்தரும் பள்ளியில் படிக்கும் போதே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் அவர்களது பெற்றோருக்கு பிடிக்காததால் ராகினியை உறவினரான வசந்த் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. திருமணம் முடிந்தாலும் ராகினியால் சுதா சந்தரை மறக்க முடியவில்லை. இருவரும் செல்போனில் பேசிய தங்களது காதலை வளர்த்துக் கொண்டுதான் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த விஷயம் அவரது கணவர் வசந்துக்கு தெரிய வர அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ராகினி தனது அண்ணன் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். ஆனால் திடீரென ஒரு மாதம் முன்பாக வீட்டை விட்டு வெளியே வந்து காதலன் சுதா சந்தருடன் இரட்டை ஏரி பகுதியில் தனி வீடு வாடகைக்கு எடுத்து இந்த ஜோடி வசித்து வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ராகினியின் கணவர் வசந்த் மற்றும் அவரது அண்ணன்கள் உதயா மற்றும் பரத் என்ற ராபின் ஆகியோர் இணைந்து சதி திட்டம் தீட்டி சுதா சந்தரை கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு துணையாக கார்த்திக்கு என்ற ஆட்டோ டிரைவர் இருந்திருக்கிறார். ஆட்டோ டிரைவர் கார்த்திக்கின் துணையுடன் சுதா சந்தரை சுற்றி வளைத்த இவர்கள் மூவரும் அறிவாளால் வெட்டிக் கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த விஷயங்களை தெரிந்து கொண்ட காவல் துறை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ராகினியின் அண்ணன்கள் ஆன உதயா பரத் மற்றும் ஆட்டோ டிரைவர் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராகினியின் கணவர் வசந்த் மற்றும் அவரது தந்தை வாசுதேவன் ஆகியோரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.