மது போதையில் என்ன செய்கிறோம் தெரியாமல் பலரும் நடந்து வருவது வழக்கமாகி உள்ளது. அதற்கு மேலும் ஒரு சான்றாக இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநில பகுதியில் பாபு தனது மனைவி மினி (25) சேர்ந்து வசித்து வருகிறார். மேலும் இவர்கள் பவானி அம்மன் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து, கட்டிட வேலைகளை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில், பாபு மது குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணத்தினை கேட்டிருக்கிறார். மனைவி பணம் இல்லை என்று தர மறுத்துள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பாபு, சட்டென்று சமையல் அறையில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த சுடும் வெந்நீரை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார்.
இந்ந சம்பவத்தினால் உடல் வெந்த நிலையில் வலி தாங்க முடியாமல் கத்தி மனைவி கூச்சலிட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்ததை தொடர்ந்து, பாபு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் பலத்த காயமடைந்த மினியை மீட்டு அக்கம் பக்கத்தினர், உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் ,காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருக்கின்ற பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.