fbpx

மகிழ்ச்சி…! 2025-26-ம் ஆண்டுக்கு வீடுகளுக்கான மானியம்… தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு…!

2025-26-ம் ஆண்டுக்கு வீடுகளுக்கான மானியம் ரூ.7,752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிசை வீடுகள், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரமும், விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

வரும் 2025-26-ம் ஆண்டுக்கு ரூ.16,274 கோடி வழங்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில், வீடுகளுக்கான மானியம் ரூ.7,752 கோடி, விவசாயத்துக்கு ரூ.7,047 கோடி, குடிசை வீடுகளுக்கு ரூ.360 கோடி, வழிபாட்டு தலங்களுக்கு ரூ.20 கோடி, விசைத்தறிக்கு ரூ.560 கோடி, கைத்தறிகளுக்கு ரூ.15 கோடி, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு ரூ.398 கோடி, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது மின்இணைப்புகளுக்கு ரூ.49 கோடி அடங்கும்.

ஆண்டுதோறும் எவ்வளவு மானியத் தொகை வழங்க வேண்டும் என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்து அரசுக்கு உத்தரவிடுகிறது. அதற்கு ஏற்ப அந்தத் தொகை மின்வாரியத்துக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வழங்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டு வீடுகளுக்கான மானியம் ரூ.7,752 கோடி, விவசாயத்துக்கு ரூ.7,047 கோடி, குடிசை வீடுகளுக்கு ரூ.360 கோடி, வழிபாட்டு தலங்களுக்கு ரூ.20 கோடி, விசைத்தறிக்கு ரூ.560 கோடி, கைத்தறிகளுக்கு ரூ.15 கோடி, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு ரூ.398 கோடி, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது மின் இணைப்புகளுக்கு ரூ.49 கோடி அடங்கும்.

English Summary

Housing subsidy for the year 2025-26… Tamil Nadu government’s stunning announcement

Vignesh

Next Post

கலியுகத்தின் முடிவுக்கும் பசுபதிநாதர் கோயிலுக்கும் என்ன தொடர்பு..? பிரம்மிக்க வைக்கும் புராண கதைகள்..!!

Wed Apr 2 , 2025
Lord Shiva: If the Pashupati Lingam disappears, does it mean the end of Kali Yuga? Do you know where that Lingam is?

You May Like